Breaking News

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.  மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற …

Read More »

கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து – 11 பேர் பலி

ரஷியாவுடன் இணைந்த கிரீமியாவில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தில் 11 பேர் பலியாகி விட்டனர். ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது. அங்குள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அப்போது திடீரென தீப்பிடித்தது. …

Read More »

ஜிம்பாப்வேயில் தொடரும் வன்முறை போராட்டம்- டாவோஸ் பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பினார் அதிபர்

ஜிம்பாப்வேயில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், டாவோஸ் பயணத்தை பாதியில் ரத்து செய்த அதிபர் எம்மர்சன், உடனடியாக நாடு திரும்பினார். ஜிம்பாப்வேயில் கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு அறிவிப்பை அதிபர் எம்மர்சன் மனங்காக்வா அறிவித்ததில் இருந்து எதிர்க்கட்சியினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஹராரே, தெற்மேற்கு நகரமான புலவாயோ போன்ற இடங்களில் …

Read More »

கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் கணவனினால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.  குடும்ப பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு கணவனினால் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இச் சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிங்டன் வீதியில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  இன்று (22) காலை 6.00 மணியளவில் வீட்டிலிருந்து ஆடைதொழிற்சாலைக்கு …

Read More »

கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலி

அனுராதபுரம் – இளச்சிய, பேமடுவ பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.  நேற்று (21) பகல் 1.30 இற்கு ம் 2 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சம்பவத்தில் ஒன்றரை வயதான ஹங்சனி விக்ரமசிங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.  உயிரிழந்த குழந்தை விளையாடுவதற்காக கால்வாய் பகுதிக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  சம்பவத்தின் போது வீட்டில் தாய், தந்தை …

Read More »

மின்சாரம் தாக்கி 4 வயது சிறுவன் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி 21 நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட நட்டாங்கண்டல் கிராமத்திலுள்ள வீடொன்றில் இருந்து இன்னொரு வீட்டுக்கு பாதுகாப்பற்ற முறையில் பெறப்பட்ட மின்சாரத்தில் சிக்குண்டு குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.  இவ்வாறு உயிரிழந்த சிறுவன் நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சுந்தரமூர்த்தி நிச்சயன்  என அடையாளம் கானப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த சிறுவன் மின்சாரம் தாக்கி …

Read More »

எதிர்க் கட்சி உறுப்பினர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் இடம்பெறுகின்றன- மஹிந்தானந்த

சுயாதீன ஆணைக்குழுக்கள் ஆளும், எதிர்க்கட்சி என்று பார்க்காமல் செயற்படவேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் எதிர்க்கட்சியினருக்கு எதிரான முறைப்பாடுகளை மாத்திரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்கின்றன என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், லஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்க்கட்சியினருக்கு …

Read More »

தொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு – ஸ்ரீதரன்

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார்.   ஊழல் மோசடி ஆணைக்குழுக்களின் விசாரணைகளும்  அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Read More »

ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்-அஜித்

மத்தியவங்கி பிணைமுறி மோசடி உட்பட பாரிய நிதி மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட மோசடிகாரர்களுக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக வழக்கு தொடுக்கவேண்டும்.  ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் பி பேரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,  மத்திய வங்கி …

Read More »

ரணில் நாட்டை விட்டு தப்பியோட வழிமுறை ஒன்று உள்ளது-வாசு

பட்டலந்த படுகொலைகள் தொடர்பான  விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை  பறிக்கப்பட்டிருக்குமெனவும் ஆகவே ரணில் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய ஒரே வழிமுறை மட்டுமே உள்ளது என  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்தினால்  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும் வாசுதேவ எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணைக்குழுக்கள் திருத்த …

Read More »