Breaking News
Home / காணொளி

காணொளி

யாழ்ப்பாணம் கோப்பாயில் லில்லி நலவாழ்வு இல்லம்(காணொளி)

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி கோப்பாயில், லில்லி நலவாழ்வு இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கான இல்லத்தை யாழ். மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை திறந்து வைத்தார். தேவசகாயம் குடும்பத்தினரால் கட்டிடம் அமைக்கப்பட்டு முதியோர்களுக்கான இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Read More »

சுதுமலை முருகமூர்த்தி ஆலயத்தில் கோமாதா பூஜை(காணொளி)

யாழ்ப்பாணம் சுதுமலை முருகமூர்த்தி ஆலயத்தில் கோமாதா பூஜை இன்று இடம்பெற்றது. கோவிலை அண்டிய கிராமத்திலுள்ள பசுக்கள் ஆலய முன்றலுக்கு கொண்டுவரப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது. தைப்பொங்கலிற்கு அடுத்த நாள் சைவ மக்களின் மரபுக்கேற்ப பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மக்கள் பட்டிகள் கட்டப்படுகின்ற தொழுவங்களில் பட்டிப்பொங்கலை பொங்கி கொண்டாடுகின்றனர். பட்டிப்பொங்கல் தினமான இன்றையதினம் சுதுமலை முருகன் ஆலயத்தில் அருகிலுள்ள பசுக்கள் மக்களால் கொண்டுவரப்பட்டு பொங்கல் பொங்கி பசுக்களுக்கு மாலையிட்டு, பட்டுடை அணிவித்து …

Read More »

இழுவைப்படகு மீன்பிடி தொடர்பான சட்டம் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை(காணொளி)

இழுவைப்படகு மீன்பிடியை அரசாங்கம் தடைசெய்வதாக அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பான சட்டம் இன்னும் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வேலணை மேற்கு கிராமிய கடற்தொழில் சங்க பிரதிநிதி ஜோண்சன், …

Read More »

தலைமையை மாற்ற வேண்டும் என கூறுபவர்கள், போராட்ட வரலாற்றில் எங்களை காட்டிக் கொடுத்தவர்களே – ப.சத்தியலிங்கம் (காணொளி)

தமிழரசுக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதற்கு, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என, வடக்கு மாகாண உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பண்டாரிகுளம் வேட்பாளர் க.சுமந்திரனின் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.  

Read More »

யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவு தினம் (காணொளி)

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில், 1974 ஆம் ஆண்டு இன்றையதினம் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது கொல்லப்பட்ட 9 பேரின் 44 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் உணர்வாளர்களால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றது. நிணைவு தூபிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலில் பாராளுமனற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை …

Read More »

கிளிநொச்சியில் விபத்து4 பேர் பலி(காணொளி)

கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் கொக்காவில் பகுதியில் கொழும்பில் இருந்து வந்துகொண்டிருந்த ஹயஸ் வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவருகிறது. குறித்த விபத்தானது நேற்று (09) இரவு 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் படுகாயமடைந்தவர்களை பொது மக்கள் மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

நாட்டுப்பற்றாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர் அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று 5.1.2018 வெள்ளிக்கிழமை வூப்பெற்றால் நகரில் உள்ள Katholischer Friedhofஇல் நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு தங்கள் இறுதிவணக்கத்தைத் தெரிவித்தனர். அமரர் றிச்சாட் இமானுவேல் அவர்களின் சமயக் கிரியைகளின் நிறைவில், வூப்பெற்றால் நகரச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி சுமந்துவரப்பட்டு அன்னாரின் பூதவுடலுக்கு போர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ …

Read More »

கேப்பாபுலவில் காணி விடுவிப்பு ஓர் ஏமாற்று வேலை –ரவிகரன்(காணொளி)

காணி விடுவிப்பு  தொடர்பில் கருத்துத் தெரிவித்த  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்……………………

Read More »

ஜனநாயக போராளிகள் கட்சி பற்றி கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

ஜனநாயக போராளிகள் கட்சி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார்……….  

Read More »

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வி.மணிவண்ணன்!- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

யாழ் மாநகர முதல்வர் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…………………….  

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com