Breaking News
Home / உலகம்

உலகம்

600 சட்ட விரோத குடியேறிகள் காப்பாற்றிப்பட்டுள்ளனர்.

மொரோக்கிவில் இருந்து ஸ்பேன் ஊடாக ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமான பயணித்த 600 சட்டவிரோத குடியேறிகள் காப்பாற்றிப்பட்டுள்ளனர். ஸ்பேனிய கடற்பாதுகாப்பு பிரிவு இவர்களை காப்பாற்றியுள்ளது. 15 சிறிய படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த இந்த குடியேற்ற வாசிகளிடையே 35 சிறுவர்களும் இருந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் ஸ்பானுக்கு 9 ஆயிரம் சட்டவிரோத குடியேறிகள் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

Read More »

வெனிசுலாவில் சிறைச்சாலையில் மோதல் – 37 பேர் பலி

தென் வெனிசுலாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இடம்பெற்ற மோதலில் 37 பேர் பலியாகினர். வெனிசுலான் பாதுகாப்பு தரப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தனிப்பட்ட சில பிரச்சினைகளை அடுத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த முறுகல் நிலையை கட்டுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் போது 14 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஹொங்கொங்கின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை

ஹொங்கொங்கின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் ஒன்றில் பங்கேற்றமைக்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் அடிப்படையில் ஜொஸ்வா ஹொங் என்ற இந்த செயற்பாட்டாளர் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது. இந்தநிலையில் குறித்த தண்டனை விதிப்பை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.        

Read More »

டுபாயில் டோனியின் பயிற்சி பட்டறை

டுபாயில் பயிற்சி பட்டறை ஒன்றை இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.டோனி ஆரம்பிக்கவுள்ளார். டுபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப் ஒன்றுடன் இணைந்து குறித்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஆரம்பிக்கவுள்ளார். இந்த பயிற்சி பட்டறை எம்.எஸ்.டோனி என்ற பெயரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. படிப்படியாக இந்த கிரிக்கெட் பயிற்சி பட்டறையை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

மீண்டும் வருகிறார் மரியா ஷரபோவா

18 மாத தடைக்கு பின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மரியா ஷரபோவா பங்கேற்கிறார். ரஷ்யாவை சேர்ந்த 30 வயதான மரியா ஷரபோவா, கடந்த 18 மாதங்களுக்கு பின்னர் விளையாட இருக்கும் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபனில் டெனிஸ் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். ஆண்டின் 4வதும் மற்றும் இறுதியுமான கிராண்ட்ஸ்லாம் தொடரின் அமெரிக்க ஓபன் எதிர்வரும் 28ம் திகதி …

Read More »

சியரா லியோன் – நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் பெய்து வந்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் பிரிடவுன் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. அங்குள்ள ரெஜன்ட் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்து விட்டது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள் என்ற பரிதாப நிலை, அங்கு உள்ளது. இன்னும் 600 பேரை காணவில்லை. இடிபாடுகளுக்கு இடையே அவர்களை …

Read More »

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானலில் நடந்த இரோம் சர்மிளா திருமணம்

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று இரோம் சர்மிளா திருமணம் நடைபெற்றது.

Read More »

கவுதமாலா: மருத்துவமனைக்குள் புகுந்து 6 பேரை கொன்று கூட்டாளியை மீட்ட கிரிமினல் கும்பல்

கவுதமாலா நாட்டில் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு வந்த தங்களது கூட்டாளியை சினிமா பாணியில் கிரிமினல் கும்பல் ஒன்று துப்பாக்கிச்சூடு நடத்தி மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Read More »

இந்திய – சீன வீரர்கள் மோதல் குறித்து தகவல் தெரியாது – சீன வெளியுறவு அமைச்சகம்

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்கள் மோதியதாக வெளியான செய்தி குறித்து தகவல்கள் தெரியாது என சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஹஜ் யாத்ரீகர்களுக்காக கத்தார் எல்லையை திறக்க சவூதி அரேபிய மன்னர் முடிவு

கத்தாரைச் சேர்ந்த ஹஜ் புனித யாத்ரீகர்களுக்காக அந்நாட்டுடனான எல்லையை மீண்டும் திறக்க சவூதி அரேபிய மன்னர் சல்மான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More »