Breaking News
Home / ஆசிரியர் தலையங்கம்

ஆசிரியர் தலையங்கம்

விக்கி தவிக்கும் வடமாகாணசபை!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக   எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர்  விசாரணைக் குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர்.

Read More »

முள்ளிவாய்க்காலில் ஆத்மீக சுடரா? அரசியல் சுடரா?

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.

Read More »

உலக ஊடக சுதந்திர தினமும் ஈழத்தீவும்

இன்று (3) உலக ஊடக சுதந்திர தினம் உலகெங்கிலும் அனுட்டிக்கப்படுகின்றது.”மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று ஊடக சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்க ஊடகங்களினால் கூட்டாக …

Read More »

உயிர் விதைத்த மண்ணில் உதைபந்தாட்டமா?

முள்ளிவாய்கால் தமிழின விடுதலைப்போருக்கான ஒருமுற்றுப்புள்ளியாய் போனதா? முடிவிலியாய் போனதா? என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

Read More »

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட  தமிழனுக்கு 
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்….

சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே …

Read More »

தமிழர்களின் தன்னுரிமைப் பறிப்பின் குறியீடே பெப்ரவரி-4!குறியீடு இணையம்!

வட-கிழக்கு உள்ளடங்கிய வரலாற்று வழிவந்த மரபுவழித் தாயகத்தில் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தம் சார்ந்த அரசர்களால் ஆளப்பட்டுவந்த நிலையில்தான் இலங்கைத் தீவு அந்நிய படையெடுப்பிற்குள்ளானது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரைத் தொடர்ந்து இலங்கைத் தீவை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்த பிரித்தானியர்கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக மொழி, இனம், சமயம், பழக்க வழக்கங்கள் மற்றும் பண்பாட்டு ரீதியில் முற்றாக வேறு வேறான தனித்துவத்தைக் கொண்டிருந்த இரு தேசிய இனங்களையும் ஒற்றையாட்சி …

Read More »

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைமையானது சலுகைகளுக்காக இன விடுதலையை தாரைவார்த்து அடிபணிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றமையானது அந்த இலட்சியத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கு …

Read More »

தமிழர் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் ஓய்ந்தது!!!

‘ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்…’ என்ற கர்ஜனைக் குரலில் கோடான கோடி தமிழர்களை கட்டிப்போட்டதுடன் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஓங்கி ஒலித்து வந்த சிம்மக்குரல் இன்று ஓய்ந்தது. ‘உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்..’ என்ற தாரக மந்திரத்தை மெய்யாக்கும் வகையில் மக்கள் பணியாற்றிவந்த மான்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சுகயீனம் காரணமாக இறந்துவிட்டார் என்ற செய்தி உலகத் தமிழர்களை வேதனைக்குள் ஆழ்த்தியுள்ளது. 2011 இல் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்ற நாள் …

Read More »

மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்! – குறியீடு இணையம்!

‘மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சிக் கடலில் தமிழ் மண் குளிக்கும்…’ எனும் தமிழீழ எழுச்சிப் பாடலை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உள்ளதில் உவகை ஊற்றெடுக்கின்றது. அந்த பாடல் வரிகளுக்குள்ளாகவே விடுதலைப் போராட்டக் களம் விரிவடைந்து செல்கின்றது. சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வணங்கா மண் வன்னியிலுள்ள கற்சிலைமடு பகுதியில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர் முடியுரிமை 1980 களில் மீண்டும் தமிழர்களின் கைகளில் கிட்டய போதிலும் எம் இனத்துடனே உடன்பிறந்த …

Read More »

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தை புத்தனின் பெயரால் கபளீகரம் செய்ய சதி!ஆசிரியர்-குறியீடு இணையம்.

தமிழர்களின் வரலாற்று ரீதியான மரபுவழித் தாயகத்தை இராணுவ மேலாதிக்கத்தின் மூலம் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசானது புத்தனின் பெயாரால் அதனை நிரந்தரமாகவே கபளீகரம் செய்யும் திட்டத்துடனே தமிழர் தாயகமெங்கும் புத்தர் சிலைகளை முழு வீச்சில் நிறுவிவருகின்றது. ஆசையே துன்பத்தின் அடிப்படை என்று போதித்த கௌதம சித்தார்தரின் வழி நடக்கும் சிங்கள பௌத்த மடாதிபதிகளின் மண்ணாசையே இலங்கைத் தீவின் இரத்த சரித்திரத்தின் ஊற்றுக்கண்ணாகும். இலங்கைத் தீவு முழுவதுமே சிங்கள …

Read More »