Breaking News
Home / புலம்பெயர் தேசங்களில்

புலம்பெயர் தேசங்களில்

யேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்

இன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் “விட்டன்” எனும் நகரத்தில் பல்வேறு மனிதவுரிமை அமைப்புகள் இணைந்து நிழற்பட கண்காட்சி ஒன்றினை நடாத்துகின்றனர். இவ் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வுக்கான காரணிகளை கண்காட்சியாக வடிவமைத்து பார்வைக்கு வைக்க யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை ஒழுங்குசெய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2018 யேர்மனி, சார்புறுக்கன்

16.6.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி சார்புறுக்கனில் உள்ள டில்லிங்கன் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம்

  பேர்ண்;இ 14.06.2018 இலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் அன்பார்ந்த மக்களே! தமிழீழ தேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனித நேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத்தப்பட்டது. நிதிமோசடி, பயமுறுத்திப் பணம் சேகரித்தல், பணச்சுத்திகரிப்பு, தவறான ஆவணங்கள் உபயோகித்தமை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஓர் குற்றவியல் அமைப்பாகவும் அவ் அமைப்பிற்காக செயற்பட்டமை …

Read More »

கனடாவில் காணாமல் போன ஈழ தமிழ் இளைஞனின் ஆபத்தான நிலை

கனடாவில் கடலில் விழுந்து காணாமல் போன இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Read More »

சுவிஸர்லாந்தின் தடுப்பு முகாமில் தமிழ்ப் பெண் தற்கொலை!

சுவிஸர்லாந்தின் பசல் யூனிஸ்பிட்டல் பகுதியில் உள்ள வாகாப் தடுப்பு முகாமில்தற்கொலை செய்ய முயற்சித்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.

Read More »

“ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோமும்” விசுவமடு பிரியாவிடையும். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை –

ஸ்ரொக்கொல்ம் சின்ட்ரோம் (Stockholm Syndrome) எனப்படும் சம்பவம் ஒரு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அனுதாபச் சம்பவமாகும். 1973ம் ஆண்டு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்கொல்மில் அமைந்துள்ள வங்கியொன்றில் இரண்டு கொள்ளையர்கள் அதிரடியாக நடாத்திய கொள்ளைச்சம்பவத்தின் போது பணயக்கைதிகளாக பொதுமக்களைப் பிடித்து வைத்தனர். கிட்டத்தட்ட ஆறுநாட்கள் நடைபெற்ற இப்பணயக்கைதிகள் சம்பவத்தை முடிவிற்குக் கொண்டுவந்த காவல்துறையினர் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். இங்கு நடந்த ஆச்சரியமான விடயம் என்னவெனில் மீட்டெடுக்கப்பட்ட எவருமே …

Read More »

தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை! – சுவிற்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு! காணொளி

14. 06. 2018 இன்று சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு என சுமத்தப்பட்ட குற்றமும் தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்து. உலக தமிழ்ர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)யை ஒரு குற்றவியல் அமைப்பாகக் கருதுவதில்லை என தீர்ப்பளித்துள்ளது. விசாரணையில் …

Read More »

ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்!

ஈழத்துக் கவிஞர் சேரன் தலைமையில் ஜுன் 17 ஆம் திகதி கவிதை உரைகள் இசை நடனத்துடன் ஒரு மந்திர மாலைக்கு உங்களை அழைக்கின்றனர்.

Read More »

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் வணக்க நிகழ்வு நடைபெற்றதுடன் தொடர்ந்து மாணவர்களுக்கான உதவி வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏனைய 2 மாணவர்களுக்கான …

Read More »
Facebook Auto Publish Powered By : XYZScripts.com