Breaking News
Home / முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

புதிய அரசியல் அமைப்பு தேவையில்லை என வெளியான செய்தி தொடர்பில் ரணில் ஆவேசம்

மல்வத்து, அஸ்கிரிய பீடங்களினது மகாநாயகக்கர்கள் பங்கேற்காத கூட்டத்திலேயே புதிய அரசியலமைப்பொன்றோ அல்லது தற்போதைய

Read More »

இது சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “போருக்குப் பின்னரே இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனும் அபிப்ராயம் கடுமையாக உருவாக்கப்பட்டது. எனினும், வரலாற்றை பிழையாக படித்துவிட்டு இலங்கை ஒரு முழுமையான சிங்கள பௌத்த நாடு என கூறுவதையே காணக்கூடியதாகவுள்ளது. வடக்கில் …

Read More »

புதிய அரசியலமைப்பை நாம் எதிர்க்காவிட்டால் எமது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது உரிமையை முற்றுமுழுதாக பறிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Read More »

தெற்கை பாரிய சத்தம் – எரிகல் என தெரிவிப்பு

இலங்கையின் தென் கடற்பகுதியில் நேற்றையதினம் மர்மமான முறையில் மிகுந்த பிரகாசமான ஒளியும், அதிக சத்தமும் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இரவு 8.45 முதல் 9.00 மணி வரையில் இந்த சத்தம் ஒளியும் ஏற்பட்டுள்ளது. இதனை காலி, மாத்தறை, அக்குரஸ்ஸ மற்றும் தெனியாய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானித்ததாகவும் கூறப்படுகிறது. தென் கடற்பரப்புக்கு அருகில் வாழ்கின்ற மக்கள் வானில் இருந்து மர்மமான ஒளி ஒன்று வீழ்வதை அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அனர்த்த …

Read More »

என்ரோய்ட் கைப்பேசிகளை பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் அண்ட்ரொயிட் திறன்பேசிகளில் ரென்சம்வெயர் எனப்படும் கப்பம் பெறும் மென்பொருட்கள் அச்சுறுத்தல் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி அவசர தயார் நிலையில் குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதொடர்பில் அன்ட்ரொயிட் திறன்பேசி பாவனையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ‘அழ வேண்டுமா’ என்று பொருள்படும் வொன்னக்ரை என்ற கப்பம்பெறும் மென்பொருள் தீம்பொருள் ஒன்றின் ஊடாக 99 நாடுகளில் பல்வேறு கணினிகள் பாதிக்கப்பட்டன. ஆய்வுகளில் தற்போது இவ்வாறான மென்பொருள் …

Read More »

மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை

ஏறாவூரில் மக்களின் அச்சம் போக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகரிடம் முன்னாள் கிழக்கு முதல்வர் கோரிக்கை தற்போது  நடக்கின்ற சில சம்பவங்களை பார்க்கின்ற போது  மனிதம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதா என்ற சந்தேகம்  தோன்றுவதாக  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார், தாயும் மகளும்  கொலை செய்யப்பட்ட சம்பவம்  இடம்பெற்று அதன் வடுக்கள் இன்னும் மக்கள் மனங்களில் இருந்து ஆறாத …

Read More »

சிறைக்கைதிகளின் உயிரோடு விளையாடுகின்ற செயற்பாடாக எதுவும் அமைந்துவிடக்கூடாது – ஸ்ரீநேசன்.

ஜனாதிபதி யாழ்பாணத்திற்கு வருவார் என்றோ வராமாட்டார் என்றோ எண்ணிய நிலையில் சிறைக்கைதிகள் தொடர்பான போராட்டதினை முன்னெடுத்திருக்கலாம் ஆனால் ஜனாதிபதி அந்த இடத்தில் இறங்கிவருகின்றபோது. குறித்த ஆர்ப்பாட்ட காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் தங்களது கருத்துக்களை முன்வைத்திருக்க வேண்டும். அதுமாத்திரமின்றி ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது அதற்கு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தைக்கு சென்று பேச்சவார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும் இதுவே இன்றைய காலகட்டத்திற்கு உகந்ததாகும். என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து …

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் 10 நாட்களில் விடுதலைசெய்யப்பட வேண்டும் – சம்பந்தன்

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் விடுதலைத் தொடர்பிலும் 10 நாட்கள் அல்லது இரண்டு வாரங்களுள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை இரா.சம்பந்தன் நேற்று முன்வைத்தார். இதுதொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதில் வழங்கிய சட்ட …

Read More »

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் கைது?

நீதிமன்ற உத்தரவை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் நிச்சம் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுந்திர இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் நீதிமன்றத்தின் தடையை மீறி போரராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய காவற்துறை மா அதிபர், நாட்டின் சகல பகுதிகளிலும் ஒரே மாதிரியான சட்டமே அமுலாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன்படி …

Read More »

தீவிரவாத முறியடிப்பு சட்டமூலம் அடுத்தவருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என அரசாங்கம் உறுதி!

தீவிரவாத முறியடிப்பு சட்டமூலம் அடுத்தவருடம் முதற்பகுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளதுடன், அது குறித்த பல்வேறு தரப்பினரின் இணக்கப்பாடும் அவசியப்படுகிறது. இந்தநிலையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அடுத்தவருடம் முற்பகுதியில் இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய ஒத்திவைப்பு …

Read More »