சிங்கப்பூரில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்துகொண்டே சட்டபட்டப்படிப்பை பூர்த்தி செய்த இலங்கை பெண்

57 0

ஜெயந்தி கமகே தனது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவரது மின்னஞ்சலிற்கு  லண்டன் பல்கலைகழகத்திலிருந்து ஒரு செய்தி வந்தது அதில் பாஸ் என்ற சொற்கள் காணப்பட்டன.

அது சட்டத்துறையில் பட்டத்தினைபெறுவதற்கானஅவரது ஏழு வருட போராட்டத்தினை பூர்த்தி செய்து வைத்தது.

வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றிக்கொண்டிருந்தவரின் கனவு நினைவானது.

43 வயது இலங்கை பெண்ணிண் பயணத்தை நீண்டகால பயணம் என மாத்திரம் குறிப்பிடுவது அவரது பயணத்தை மலினப்படுத்திவிடும்.அந்த பயணம் இரண்டு நாடுகள் பல கிலோமீற்றர்கள் நீடித்தது.

சிங்கப்பூரில் அவர் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிந்தவேளை பலவருடங்கள் தனது கல்வியுடன்தடுமாறினார்.

இலங்கையில் கணக்காய்வு உதவியாளராக பணிபுரிந்தவேளை கிடைத்த சம்பளத்தை விட சிங்கப்பூரில் இரண்டு மடங்கு அதிகமான வருமானம் கிடைப்பதாக கமகே எங்களிடம் தெரிவித்தார்.

தனது சட்டபடிப்பை ஆரம்பித்து மூன்று வருடங்களின் பின்னர் தனது கல்விக்கான பணத்திற்காக அவர் இலங்கையிலிருந்து வெளியேறினார்.

தனது குழந்தை பருவகனவை நினைவாக்கவேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால் அவள் வெளிநாட்டிற்கு செல்வதால் ஏற்படக்கூடிய எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ள தயாராகயிருந்தால்.

2000 ஆண்டிலிருந்து பத்துதடவை இலங்கை சட்டக்கல்லூரிக்கான பரீட்சையில் அவள் தோல்வியடைந்திருந்தால்.

இது மிகவும் நீண்டபயணம் மிகவும் கடினமான வேலை என தற்போது சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மேற்பார்வையாளராக உள்ள கமகே தெரிவித்தார்.

எனதுஉணர்வுகளை வார்த்தைகளிற்குள் அடக்க முடியாது ஆனால் மனஉறுதியிருந்தால் வழி உள்ளது என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் சவால்கள்

கமகே இரவில் பல நாட்கள் கண்விழித்திருந்தார்-தனது கற்றலுக்கான போதிய நேரமின்றி சிரமப்பட்டார்.வார இறுதி நாட்களில் இணையவழி கற்றலில் ஈடுபட்டார் எப்போதெல்லாம் நேரம் கிடைத்ததோ அப்போதெல்லாம் கற்றலில் ஈடுபட்டார்.

நான் லிப்ஸ்டிக்கையோ  அல்லது அழகுசாதனப்பொருட்களையா வாங்கவில்லை ஒவ்வொரு டொலரையும் எனது பட்டப்படிப்பிற்காக செலவிட்டேன் என்கின்றார் அவர் .

மிகவும் நெருக்கடியான தருணங்களில் கூட அவர் தனக்கான நம்பிக்கை ஒளியை  ஏற்படுத்திக்கொண்டார்-ஒவ்வொன்றையும் நான் புதிய கற்றல் அனுபவமாக பார்த்தேன் கடந்த காலங்களில் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளாததால்தான் இவை எனக்கு நெருக்கடியான விடயமாக தெரிகின்றன  என நான் கருதினேன் என அவர் தெரிவித்தார்.

அதிகம் அளாதவர் என கமகேயை குறிப்பிடும் இலங்கையர் ஒருவர் எனினும்தனது பெற்றோருடன் மீண்டும் இணைவதற்கான அவரது மனப்போராட்டங்கள் குறி;;த்து குறிப்பிடுகின்றார்.

கமகேயின் தந்தையார் ஒரு வாகனச்சாரதி தந்தையும் தாயும் சாதாரண மனிதர்களாகயிருந்த போதிலும் அவருக்கு எப்போதும் ஆதரவாகயிருந்தனர்.

அவர்கள் முழுமையான கல்வியை பெறாதவர்கள் என்ற போதிலும் அவர்களிற்கு கல்வியி;ன பெறுமதி தெரிந்திருந்தது என்கின்றார் கமகே.

2021 இல் தனது முதலாவது வேலை தொடர்பான ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் அவர் மீண்டும் பெற்றோரை பார்ப்பதற்கு அவர்களுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு ஆர்வம் கொண்டிருந்தார்.

எனினும் கொவிட் காரணமாக எல்லைகள் மூடப்பட்டதால் அவரால் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியாத நிலையேற்பட்டது.

அதுவே எனது வாழ்க்கையின் மிகவும் நெருக்கடியான மோசமான காலம் என்கின்றார் கமகே.

நான் அவர்கள் இல்லாமல் மிகவும் வேதனைப்பட்டேன் அவர்களின் உடல்நலம் குறித்து அச்சம்கொண்டிருந்தேன்  பலவிடயங்கள் எனது மனதில் ஒடின என்கின்றார் அவர்.