‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்

96 0

புத்தக வாசிப்பின் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்று  செவ்வாய்கிழமை (23) கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தின் கருப்பொருள் உங்கள் வழியைப் படியுங்கள்’ என்பதாகும்.

இந்த கருப்பொருளானது வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கிறது.

அத்தோடு, புத்தகங்களின் நோக்கம் மற்றும் பல்வேறு பின்னணியில் உள்ள மக்களை ஊக்குவிக்கும் மற்றும் கல்வி கற்பிக்கும் திறன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.