Breaking News
Home / தமிழீழம்

தமிழீழம்

மஹிந்த வராமல் இருப்பதற்கே ரணிலுக்கு ஆதரவு-சிவமோகன்

இன்றைய ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, மஹிந்த ராஜபக்ஷ வேண்டாம் என்பதற்காகவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு, இராணுவ கட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அந்தப் பிரச்சினைகள் கடந்த மூன்றரை …

Read More »

யாழில் சமாதானப் புறா விட்ட போர்க்குற்றவாளி சவேந்திரடிசில்வா!

இறு­திக்­கட்­டப் போரின் போது போர்க்­குற்­றங்­களை இழைத்­தார் என்று கடு­மை­யான குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டுள்ள மேஜர் ஜென­ரல் சவேந்­திர சில்வா யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இன நல்­லி­ண­கத்­துக்­காக சமா­தா­னப் புறாபறக்க விட்­டார்.

Read More »

மன்னார் மனித புதைகுழியை ஐ.நா. சபை பொறுப்பேற்கக் கோரி போராட்டம்

மன்னார் நகர நுழைவாயிலுள்ள ‘சதொச’வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வடக்கு,கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று காலை போராட்டம் ஒன்று இடம்பெற்றது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று  காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த …

Read More »

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட நான்காவது வருட மற்றும் இரண்டாவது வருட மாணவர்களுக்கிடையில் நேற்று இரவு மோதல் இடம்பெற்றுள்ளது. குறித்த மோதலில் காயமடைந்த இரண்டாவது வருட மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தில் நான்காவது வருட மாணவர்களால் இரண்டாவது வருட மாணவர்களுக்கு பகிடிவதை வழங்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட வாய்த்தகராறின் காரணமாக இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை காயங்களுக்குள்ளான மாணவர்களால் தாக்கிய குறித்த மாணவர்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் …

Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை விசாரணைகள் ஒத்திவைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைக்கு அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று விசாரணைகனை ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பொலிஸ் …

Read More »

ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகம்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற் றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளா் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

Read More »

மனித புதைகுழியில் 21 சிறுவர்களுடைய எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் மனித புதை குழியின் அகழ்வு பணிகள் இன்று (11) 115 ஆவது நாளாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்றது. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அகழ்வு பணிகளின் போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மாதிரிகள் ´காபன்´ பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜனவரி மாதம் அளவில் காபன் பரிசோதனைக்காக புலோரிடாவுக்கு அனுப்பப்படும்.கடந்த வாரம் அகழ்வு …

Read More »

பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனையடுத்து இவ் விடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந் நிலையிலேயே அவர் நேற்றிரவு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை …

Read More »

ஆளுநர் உத்தரவிட்டும் வவுனியா பழைய பஸ் நிலையம் இயங்கவில்லை

வடமாகாண ஆளுநரின் உத்தரவிற்கு அமைய மீளத்திறக்கப்பட்ட வவுனியா பழைய பஸ் நிலையம் செயற்படவில்லையென பயணிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 7ஆம் திகதி வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் உத்தரவிற்கு அமைய பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்வதற்கு பல்வேறு தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியிலிருந்து பஸ் நிலையம் மீளத்திறக்கப்பட்டபோதும் பஸ்கள் இ.போ.ச மற்றும் தனியார் தமது சேவைகளை திறம்பட மேற்கொள்ளவில்லை. வடமாகாண ஆளுநரின் …

Read More »

தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்  ரகுபதி  காலம் ஆனார்!

முல்லை மாவட்ட வவைத்தியசாலை முன்னாள் பணிப்பாளரும் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலை பொது வைத்திய நிபுணருமான  ரகுபதி  காலம் ஆனார்.

Read More »