பல்கலைக்கழக வளாகத்தில் முகாமிட்டு இஸ்ரேலுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம்

20 0

அமெரிக்க பல்கலைகழகங்களில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் பல்கலைகழகங்களை சூழவுள்ள பகுதிகளில்கூடாரங்களை அமைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அதேபோன்ற போராட்டங்களை அவுஸ்திரேலிய பல்கலைகழக மாணவர்களும் முன்னெடுத்துள்ளனர்.

சிட்னி பல்கலைகழகத்தில் அவ்வாறான போராட்டத்தை மாணவர்கள் ஆரம்பித்துள்ள நிலையில் மெல்பேர்ன் பல்கலைகழகமாணவர்களும் அவ்வாறான போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மெல்பேர்ன் பல்கலைகழகம் அனைத்து ஆயுதவியாபாரிகளுடனும் தனது உறவுகளை துண்டிக்கும் போராட்டம் தொடரும் என பாலஸ்தீன செயற்பாட்டு குழுதெரிவித்துள்ளது.

பல்கலைகழகத்தை சேர்ந்த பகுதிகளில் கூடாரங்கள் பல காணப்படுவதையும் இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்கவேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதையும் வெளியாகியுள்ள படங்கள் காண்பித்துள்ளன.

சிட்னி பல்கலைகழகத்தில் இ;ந்த போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது.