திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை

Posted by - January 1, 2017

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஐஓசியிடமிருந்து எண்ணெய்க் குதங்களைப் பெறுவதற்கு இந்தியாவுடனேயே பேசவேண்டும்!

Posted by - January 1, 2017

திருகோணமலை சீனன்குடாவில், இந்திய எண்ணெய் நிறுவனமான ஐஓசியினால் நிறுவப்பட்ட மூன்று எண்ணெய்க் குதங்களை மீளப் பெறுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது குறித்து இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சு நடாத்தவேண்டுமென ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

விடுதலை வயல்களில் விதைத்துள்ள உயிர் விதைகளுக்கு உயிர் கொடுப்போம்!

Posted by - January 1, 2017

உலக விடுதலைப் போராட்டங்களுக்கெல்லாம் மகுடம் சூட்டியதாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை இட்டுச்சென்றதுடன் மண்ணுக்குள்ளிருந்து விடுதலை வேள்வி நடத்திவரும் மாவீரர்களின் இலட்சியக் கனவிற்கு உயிர் கொடுப்பது உலகத் தமிழர்களின் வரலாற்றுக் கடமையாகும். ஆயுத மௌனிப்பின் பின்னரான காலகட்டத்தில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைமையானது சலுகைகளுக்காக இன விடுதலையை தாரைவார்த்து அடிபணிவு அரசியலில் ஈடுபட்டு வருகின்றமையானது அந்த இலட்சியத்திற்காக தமது உயிரைத் தியாகம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். ஆயுதங்கள் மொனிக்கப்பட்டு

மீண்டும் திரும்புகிறார் பெடரர்

Posted by - January 1, 2017

காயம் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக ரெனிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த ரொஜர் பெடரர், நாளை பேர்த்தில் நடைபெறவுள்ள ஹொப்மன் வெற்றிக்கிண்ண தொடரில் விளையாடவுள்ளார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற கிராண்ட் ஸ்லாம் தொடரின் அரையிறுதி போட்டியில் மிலோஸ் ரயனிக்கை எதிர்த்து விளையாடிய போது உபாதைக்கு உள்ளானார். இந்தநிலையில், நாளைய போட்டியில் சுவஸ்சலாந்து அணி சார்பாக இவர் பென்சிக்குடன் இணைந்து விளையாடவுள்ளார். 35 வயதான ரொஜர் பெடரர் டெனிஸ் போட்டிகளில் 17 முறை கிராண்ட்

அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் போராட்டம்

Posted by - January 1, 2017

நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிஷ்ட லாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியுமே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட லாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த வருடம் எச்.ஜ.வி அதிகரிப்பு

Posted by - January 1, 2017

கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2016ஆம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தொற்று ஒழிப்பு இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுகாதார பாதுகாப்பு அற்ற முறையில் பச்சை குத்திக் கொள்ளலும் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்.

இந்த வருடம் தீக்காயம் குறைவு

Posted by - January 1, 2017

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த புதுவருட காலப்பகுதியில் தீக்காயங்களுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனினும், வேறு விபத்துக்களால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ மனை செய்திகள் தெரிவிக்கின்றன. மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவின் பயிற்சி அளிக்கும் பிரிவில் உள்ள மருத்துவ தாதி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்தார். இதனிடையே, நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவங்களில் 7 பேர் பலியாகினர். இவர்கள் ஏழு

ரஷ்யா – துருக்கியின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல்

Posted by - January 1, 2017

ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து சிரியாவில் தற்போது மேற்கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாதின் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அமைதி பேச்சு வார்த்தையின் பொருட்டே, இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படுள்ளது. பஷார் அல் அஸாதின் அரசாங்கத்திற்கும் துருக்கி கிளர்ச்சி குழுவிற்கும் ரஷ்யா ஆதரவு அளிக்கும் நிலையில் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் வெற்றியளிக்கும் என சர்வதேச செய்தி தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

Posted by - January 1, 2017

விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் தொடா்பில் அண்மையில் அரசாங்க அமைச்சா் ஒருவா் வெளிட்ட கருத்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பில் கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகயவியலாளா் எஸ் .என் நிபோஜனை தொலைபேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் குறித்த செய்தி தொடா்பில் கடும் ஆட்சேபனை வெளியிட்டதோடு குறித்த செய்தியினால் குறித்த அமைச்சருக்கு ஏதேனும் நடந்தால் தான் குண்டு வைக்க கூட தயங்க மாட்டேன் என ஊடகவியலாளருக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

புத்தாண்டை வரவேற்ற சிறுவன் பலி

Posted by - January 1, 2017

புத்தாண்டினை வரவேற்று ஆலய முன்றலில் பலூன ஊதி உடைத்து ஓடி விளையாடிக்கொண்டிருந்த பதினொரு வயதுச் சிறுவன் ஒருவன் படியில் தவிறிவழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தளவாய் விக்னேஷ்வரா வித்தியாலயத்தின் தரம் 6ஐச் சேர்ந்த ஜெயகரன் மதுஷன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டின் அருகிலுள்ள தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனைக்காக கட்டப்பட்டிருந்த பலூன்களை தனது தோழர்களுடன் உடைத்து