இந்த வருடம் தீக்காயம் குறைவு

328 0

625-0-560-350-160-300-053-800-668-160-90கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த புதுவருட காலப்பகுதியில் தீக்காயங்களுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், வேறு விபத்துக்களால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக மருத்துவ மனை செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவின் பயிற்சி அளிக்கும் பிரிவில் உள்ள மருத்துவ தாதி புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றைய தினம் நாட்டின் பல பாகங்களில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவங்களில் 7 பேர் பலியாகினர்.

இவர்கள் ஏழு பேரும் உந்துருளியில் பயணித்தவர்கள் என காவல்துறை போக்குவரத்து தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் இரண்டாயிரத்து 754 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில், இரண்டாயிரத்து தொளாயிரத்து 13 பேர் பலியாகினர்.

இது 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 தச 4 சதவீத அதிகரிப்பாகும்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் உந்துருளியில் பயிணித்தவர்கள் எனவும் அந்த எண்ணிக்கை 920 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 854 பாதசாரிகளும் 443 பயணிகளும், உந்துருளியின் ஓட்டுனருக்கு பின்னால் பயணித்த 202 பேரும் பலியானவர்களில் உள்ளடங்குகின்றனர்.

இதனிடையே, 2017 புது வருடத்தை வரவேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த 11 வயது சிறுவர் ஒருவர் படியில் இருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று ஏறாவூர் சவுக்கடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றது.