புத்தாண்டை இரு நாடுகள் முதலில் வரவேற்றன

Posted by - December 31, 2017

2018 ஆம் ஆண்டை வண்ணமயமான பட்டாசுகளால் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. புத்தாண்டை வண்ணமயமான பட்டாசுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்தின் ஆக்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி  ஆகிய நகரங்களே முதன் முதலில் வரவேற்றுள்ளன.

தமிழ்த் தேசியப் பேரவை ஆசீர்வாதம் பெற்றனர்!

Posted by - December 31, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையினர் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்குபொருட்டு இன்று (31.12.2017) ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளால் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் யாழ் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர்

வெளிநாட்டு தபால் கட்டணங்களில் மாற்றம்

Posted by - December 31, 2017

2018ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்களில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்திருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டுத் தபால் சேவைக்கான கட்டணம் ஐந்து ரூபாவால் உயர்த்தப்பட்டிருக்கும் அதேவேளை, வெளிநாட்டு பொதி அனுப்பும் சேவைக் கட்டணத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு தபால் சேவைக்கான கட்டணங்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். என்றபோதிலும் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின் அவ்வாறான திருத்தங்கள் எதுவும்

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசமிருந்து காணிகள் அனைத்தும் இன்றுடன் ஒப்படைப்பு

Posted by - December 31, 2017

முல்லைத்தீவில் இராணுவத்தினர் வசம் இருந்த 132 ஏக்கர் நிலப்பரப்பும் இன்றுடன் (31) பொதுமக்களுக்காக விடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செலயம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேபாபிலவ்  மற்றும் சீனிமோட்டை ஆகிய பிரதேசங்களிலுள்ள 132 ஏக்கர் நிலப்பரப்பை இராணுவத்தினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்திருந்ததாகவும் இப்பிரதேசமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளை உரிய மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்று தேர்தலை வெற்றி கொள்வோம்- ரணில்

Posted by - December 31, 2017

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியொருவரை தெரிவு செய்வதற்கு சகல கட்சிகளும் சுயேற்சைக் குழுக்களும் ஒன்று கூடியது போல ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றிகொள்ள இம்முறை உள்ளுராட்சி சபையிலும் இணைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணி ஹட்டன் டி.கே.டபிள்யு. மண்டபத்தில் இன்று (31) நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். அமைச்சர் பலனி திகாம்பரத்தின் வேலைத்திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட புகழ்ந்து ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர்

ஐ.தே.க.யின் தலைவர் ரணில்தான் 2020 இல் ஜனாதிபதி – அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதி

Posted by - December 31, 2017

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக்குவதற்கு தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்க தயாராகவுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணி ஹட்டன் டி.கே.டபிள்யு. மண்டபத்தில் இன்று (31) நடாத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டுக்கு சேவையாற்றியுள்ள ஒரு கட்சியாகும். அதேபோன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இன, மத பேதம் பார்க்காமல் செயற்படும் ஒரு தலைவர் ஆகும். சகலரினதும் உள்ளங்களை வென்று செயற்படக்

மஹிந்த அரசாங்கமொன்றை அமைத்து மஹிந்தவை வீட்டுக்கு அனுப்புவோம்- பிரசன்ன

Posted by - December 31, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 2018 ஆம் ஆண்டில் இந்நாட்டின் பிரதமராக மாற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதாக முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய கூட்டு எதிர்க்கட்சி சார்பு பாராளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க ஹேஷ்யம் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவமான முறையில் அரசியலிலிருந்து ஓய்வு பெறச் செய்வோம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அவர் தலைமயிலான அரசாங்கமொன்றை அமைத்துக் காட்டுவதற்காக தன்னை அர்ப்பணிப்பதாகவும் அம்பலாங்கொடயில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றமடைய வேண்டும்

Posted by - December 31, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் முறை விரைவாக மாற்றமடைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

தமிழனின் கண்டுபிடிப்பு: பால் கெட்டுப்போகாமல் பாதுகாக்க புதிய வழி

Posted by - December 31, 2017

பால் கெட்டுப்போகாமல் ஐந்து வாரங்களுக்கு மேல் வைத்திருக்கும் புதிய முறையை Deakin பல்கலைக்கழக ஸ்ரீ பாலாஜி பொன்ராஜ் கண்டுபிடித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

Posted by - December 31, 2017

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.