ஜேர்மன் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் தூதுவர் கலாநிதி பெலிக்ஸ் நியூமன் (Felix Neumann) மற்றும் கிறிஸ்டின் வெபர்நியூமன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.
கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.







