அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் போராட்டம்

363 0

balls-656518நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட லாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிஷ்ட லாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியுமே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட லாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.