திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை

353 0

295எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் சிவசேனை அமைப்பினால் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயூடாக வடக்கின் காங்கேசன் துறைமுகத்திலிருந்து சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இது ஒரு மத ஒடுக்குமுறையெனவும் குற்றம் சாட்டியுள்ளது. இதன்மூலம் நல்லாட்சி அரசாங்கம் எனச் சொல்லிக்கொள்ளும் அரசாங்கத்தின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளதுடன், இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.