ரஷ்யாவும் துருக்கியும் இணைந்து சிரியாவில் தற்போது மேற்கொண்டுள்ள யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாதின் அரசாங்கத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள அமைதி பேச்சு வார்த்தையின் பொருட்டே, இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைபடுத்தப்படுள்ளது.
பஷார் அல் அஸாதின் அரசாங்கத்திற்கும் துருக்கி கிளர்ச்சி குழுவிற்கும் ரஷ்யா ஆதரவு அளிக்கும் நிலையில் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் வெற்றியளிக்கும் என சர்வதேச செய்தி தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிக்கு ரஷ்யாவினால் நேற்று முன்வைத்த இந்த யுத்த நிறுத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
சிரியாவின் அமைதி பேச்சு வார்த்தைக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழக்குவதாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் பேச்சார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

