இலங்கையில் கடந்த வருடம் எச்.ஜ.வி அதிகரிப்பு

349 0

hiv1-e1427009239401கடந்த 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2016ஆம் ஆண்டு எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தொற்று ஒழிப்பு இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு அற்ற முறையில் பச்சை குத்திக் கொள்ளலும் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பிற்கு காரணம் என அந்த இயக்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார்.