கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

462 0

unnamed-11-13விடுதலைப்புலிகளின் தலைவா் பிரபாகரன் தொடா்பில் அண்மையில் அரசாங்க அமைச்சா் ஒருவா் வெளிட்ட கருத்து ஊடகங்களில் வெளியான செய்தி தொடா்பில் கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகயவியலாளா் எஸ் .என் நிபோஜனை தொலைபேசியில் தொடா்பு கொண்ட ஒருவா் குறித்த செய்தி தொடா்பில் கடும் ஆட்சேபனை வெளியிட்டதோடு குறித்த செய்தியினால் குறித்த அமைச்சருக்கு ஏதேனும் நடந்தால் தான் குண்டு வைக்க கூட தயங்க மாட்டேன் என ஊடகவியலாளருக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளாா்.

குறித்த செய்தி அனைத்து ஊடகங்களில் வெளிவந்தது. இருந்த போதும் இனந் தெரியாத தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவா் ஆங்கில ஊடகம் ஒன்றை சுட்டிக்காட்டி அதில் ஊடகவியலாளரின் பெயருடன் செய்தி வெளிவந்திருக்கிறது எனவும் எனவே இந்த செய்தியினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கிளிப் சாா்ச் பண்ணக்க கூட தயங்க மாட்டேன் எனக்கு அனைத்து ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் இதுவரை முப்பத்தி ஆறு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர் நீ முப்பத்தி ஏழாவது ஆவாய் எனவும் தொலைபேசியில் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொ்டா்பில் குறித்த ஊடகவியலாளா் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று சனிக்கிழமை பதிவு செய்துள்ளாா்.