யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது.
அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது.
நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது.
























































































