காதல் விவகாரம் – மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Posted by - January 14, 2017

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கின்ற வவுனியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா தவசிக்குளம் பகுதியை சேர்ந்த 18 வயதான ரி.வினோத் என தெரிய வந்துள்ளது. குறித்த மாணவன் மன்னார் எழுத்தூர் பெரியகமம் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் சக

கண்டியில் உயிரிழந்தவர்கள் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினாலேயே உயிரிழந்தனர்

Posted by - January 14, 2017

கண்டி போதனா வைத்தியசாலையில் இன்புளுவன்ஸா எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களுக்கு பறவை காய்ச்சல் கிடையாது என மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மிருக ஆய்வு பிரிவின் பிரதம அதிகாரி டொக்டர் ஹேமால் கொதலாவல தெரிவித்துள்ளார். சில ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டுள்ளமையினால் மக்களுக்கிடையில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை பறவை காய்ச்சல் அற்ற நாடு எனவும், பறவை காய்ச்சலுக்கான வைரஸ் எச்.வன்.என்.வன் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கன்னோருவ பகுதியிலுள்ள சுகாதார திணைக்களத்தின்

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 14, 2017

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே வறட்சியினால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 324 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 461

வறட்சியான காலநிலையால் அரசாங்கத்திற்கு மேலதிக செலவுகள் அதிகரிப்பு

Posted by - January 14, 2017

வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக அரசாங்கத்திற்கு 150 பில்லியன் ரூபா மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எவ்வித தடைகள் வந்தாலும் அதற்காக உரிய தயார் நிலையில் அரசாங்கம் உள்ளதாகவும், இதற்காக மக்களின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வறட்சி காரணமாக நாடு பூராகவும் ஒரு

ஹம்பாந்தோட்டை கலகம்-பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது

Posted by - January 14, 2017

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கலகம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் விசாரணை அறிக்கை கோரப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் கடந்த வாரம் நடைபெற்ற குழப்பம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணை அறிக்கையை கோரியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் திட்டமிடப்பட்ட கலகங்கள் ஏற்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆராயுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். சீன முதலீடுகளை உள்வாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியில் ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு வலயமொன்றை

யாழ் ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 14, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தின் அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜான் கவலை வெளியிட்டுள்ளார். 26 வருடங்களுக்கு முன்னர் ஊறணி அந்தோனியார் ஆலயத்தின் அருட்தந்தையாக பணியாற்றியவரும், தற்போது புலம்பெயர் நாட்டில் மதப்பணியாற்றிக் கொண்டிருப்பவருமான அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜன் இதனைக் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திற்கு குறுகியகால விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ள அருட்தந்தை திருச்செல்வம் தேவராஜன், ஊறணி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகைதந்து, பழைய மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜெய வழிபாட்டிலும் ஈடுபட்டார். ஊறணி மக்களால் உழைப்பின் மூலம்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலய விசேட பொங்கல் திருப்பலி (காணொளி)

Posted by - January 14, 2017

மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் விசேட பொங்கல் பண்பாட்டு திருப்பலி இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன்போது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஆசிவேண்டி விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

மட்டு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு(காணொளி)

Posted by - January 14, 2017

தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பண்பாட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை பொங்கலை சிறப்பிக்கும் வகையில் விசேட நிகழ்வுகளும் பண்பாட்டு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் தேவாலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. மதங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் பொங்கல் பண்பாட்டு திருப்பலி இதன்போது

மட்டக்களப்பில் விபத்து-மூவர் படுகாயம்(காணொளி)

Posted by - January 14, 2017

மட்டக்களப்பு கல்லடியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு அருகில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளும், காரும் கடுமையாக சேதமடைந்தன. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக சம்பவத்தை நேரில்

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

Posted by - January 14, 2017

தைப்பொங்கல், உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை மாதம் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள். வருடந்தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால்