நிலையவள்

நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்!

Posted by - January 24, 2022
நாட்டில் மேலும் 877 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 602, 763 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்

திலும் அமுனுகமவுக்கும் கொவிட்!

Posted by - January 24, 2022
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் தமது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கும் இன்று கொவிட் தொற்று உறுதியானது.
மேலும்

கைக்குண்டு விவகாரத்திலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் – காவல்துறையினருக்கு இடமளியோம்! – பேராயர்

Posted by - January 24, 2022
பொரளை அனைத்து பரிசுத்தவான்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டை பிறிதொரு தரப்பின் மீது சுமத்திவிட்டு, அதிலிருந்து நழுவிச் செல்ல அரசாங்கம் மற்றும் காவல்துறையினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஏப்ரல் தாக்குதல் மற்றும்…
மேலும்

CPC க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - January 24, 2022
93 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் 14 கொவிட் மரணங்கள்

Posted by - January 24, 2022
நாட்டில் மேலும் 14 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (23) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,313 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை,…
மேலும்

மின் விநியோகம் தொடர்பான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை – மஹிந்த

Posted by - January 24, 2022
மின்விநியோகம் தொடர்பிலான உத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாடு தழுவிய ரீதியில்…
மேலும்

போதைப் பொருளுடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் கைது

Posted by - January 24, 2022
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை மாவட்ட…
மேலும்

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!-மனோ

Posted by - January 24, 2022
நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். பண்டாரநாயக்க…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்

Posted by - January 24, 2022
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (24) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள் அவரை சிறிது நேரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
மேலும்

4 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ

Posted by - January 24, 2022
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் குடியிருப்பில் இன்று (24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது.…
மேலும்