ஹட்டன் ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

381 0

hattonதைப்பொங்கல், உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை மாதம் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

வருடந்தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவது வழமையாகும்.

அந்தவகையில் மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடினார்கள்.

ஹற்றன் பகுதியில் ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் பிரம்மஸ்ரீ இ.பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் தை பொங்கல் விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலனசபையினர் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.