மட்டக்களப்பில் விபத்து-மூவர் படுகாயம்(காணொளி)

286 0

batti accidentமட்டக்களப்பு கல்லடியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு அருகில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்ததுடன், மோட்டார் சைக்கிளும், காரும் கடுமையாக சேதமடைந்தன.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.