நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

254 0

figure18நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியுடனான வானிலையினால் 31 ஆயிரத்து 771 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே வறட்சியினால் அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 324 குடும்பங்களைச் சேர்ந்த 85 ஆயிரத்து 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர், ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மூவாயிரத்து 578 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 334 பேரும், கம்பஹா மாவட்டத்தில் இரண்டாயிரத்து 107 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.