ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்
10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார்.
10 ஆண்டுகள் ஐ.நா. பொதுச்செயலாளராக இருந்த பான்-கி-மூன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு ஆண்ட்ரினோ கட்டர்ஸ் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்கிறார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்காமல் இருப்பது, நல்லாட்சியின் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்கின்றதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களாகிய நாம் ஒருவருக்கொருவரிடையில் பிரிவு மற்றும் அவநம்பிக்கை களைய வேண்டும் என்று முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவை இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ராமேஸ்வரம், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்த மீனவர்களின் பெருமளவான படகுகள் தற்போது இலங்கை அரசு தடுத்து வைத்துள்ளது. அத்துடன், இலங்கை அரசு தற்போது மீனவர்களிடம் இருந்து பெருமளவான அபராதத்தினை விதிக்க தீர்மானித்துள்ளது. எனவே இந்த அபராத தொகை அமுல்படுத்தபடும் முன்னர்
2017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 10 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் தனது மனைவியை தீ மூட்டிய கணவர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார். அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப தகராரே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்வத்தில் காயமடைந்த பெண், கந்தளாய் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
துருக்கியின் ஸ்தான்புல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பேர் பலியாகினர். ஸ்டான்புல் நகரில் உள்ள இரவு நேரவிடுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தாக்குதல் இடம்பெற்ற வேளையில், குறித்த விடுதியில் 700 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலினை அடுத்து விசேட காவற்துறை படையினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடப்பில் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தற்போது ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எவ்வாறாயினும் அணு ஆயுத திட்டங்களிலும் ஏவுகணை திட்டங்களிலும் தவறான முறையில் தாம் எதனையும் செயற்படுத்த வில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா
புதுவருடப் பிறப்பானது உலக நாடுகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கமைய பிரான், ஜேர்மன், இங்கிலான்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அண்மைகாலமாக குறித்த நாடுகளில் தீவிரவாதிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அண்மையில் ஜேர்மனில் உள்ள சனநெரிசல் கொண்ட நத்தார் சந்தை தொகுதி ஒன்றில் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பாரவூர்தி தாக்குதலில் 13 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர். இதற்கமைய மக்கள் கூட்டங்கள் உள்ள இடங்களில் பாதுப்புக்கள் பலப்படுத்தப்பட்டு புதுவருட கொண்டாட்டங்கள் கொண்டாப்படுவதாக சர்வதேச
இலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் நாளை கொழும்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நேற்று இந்தியாவின் புது டெல்லியில் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இலங்கை, இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன்பொருட்டு கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதன்போதும், இந்த பிரச்சினை குறித்து சரியான தீர்வு ஒன்று