இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவை இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ராமேஸ்வரம், நாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்த்த மீனவர்களின் பெருமளவான படகுகள் தற்போது இலங்கை அரசு தடுத்து வைத்துள்ளது.
அத்துடன், இலங்கை அரசு தற்போது மீனவர்களிடம் இருந்து பெருமளவான அபராதத்தினை விதிக்க தீர்மானித்துள்ளது.
எனவே இந்த அபராத தொகை அமுல்படுத்தபடும் முன்னர் குறித்த படகுகளை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவை தெரிவித்துள்ளார்.

