துருக்கியின் ஸ்தான்புல் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 35 பேர் பலியாகினர்.
ஸ்டான்புல் நகரில் உள்ள இரவு நேரவிடுதியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
தாக்குதல் இடம்பெற்ற வேளையில், குறித்த விடுதியில் 700 பேர் வரையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலினை அடுத்து விசேட காவற்துறை படையினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.