பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தில் தொடர்புள்ள 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இது தொடப்பில் அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் தற்போது ஏவுகணை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
எவ்வாறாயினும் அணு ஆயுத திட்டங்களிலும் ஏவுகணை திட்டங்களிலும் தவறான முறையில் தாம் எதனையும் செயற்படுத்த வில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டங்களில் தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்து, 7 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
குறித்த நிறுவனங்கள் பாகிஸ்தானின் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.