ஜனவரியில் விலகிச் செல்லும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு

373 0

1-2-600x3382017ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குழு ஒன்று அரசாங்கத்தில் இருந்து விலகிச்செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 10 பிரதியமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவர்கள் காலி, புத்தளம், குருநாகல், கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் இருவரும் மஹிந்த ராஜபக்சவின் கூட்டு எதிர்க்கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.