மனைவிக்கு தீ மூட்டிய கணவருக்கு விளக்கமறியல்

367 0

jailதிருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் தனது மனைவியை தீ மூட்டிய கணவர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, அவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தகராரே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்வத்தில் காயமடைந்த பெண், கந்தளாய் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்தனர்.