மீனவர்கள் பிரச்சினை – நாளையும் கலந்துறையாடல்

437 0

fishermanஇலங்கை, இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை கொழும்பில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நேற்று இந்தியாவின் புது டெல்லியில் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை, இந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இதன்பொருட்டு கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போதும், இந்த பிரச்சினை குறித்து சரியான தீர்வு ஒன்று பெறப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.