பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - January 16, 2017

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற நிலையில் பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனை தெரிவித்தார். இதற்கமைய, குறித்த இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான அதிகாரம் காவல்துறையிடமும், குடிவரவு குடியகழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 42 ஆயிரத்து 500 இராணுவ வீரர்கள் பொதுமன்னிப்பு காலத்தில் இராணுவத்தில்

வீரகுமார திசாநாயக்கவிடம் இன்று வாக்கு மூலம்

Posted by - January 16, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஒன்பது மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மோசடி குற்றச்சாட்டுகள் மூலம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சார கொள்வனவில் மாபியா – மின்னுற்பத்தி முதலீட்டு சங்கம்

Posted by - January 16, 2017

மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்காம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மின்னுற்பத்தி முதலீட்டு சங்கத்தினரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வரட்சி காரணமாக மின்னுற்பத்தி வீழ்ச்சியடையும் என மின்சார சபை அறிவித்தது. இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பிரதி மின் வலுத்துறை அமைச்சர் அஜித் பீ பெரேரா தெளிவுபடுத்தியிருந்தார். இந்த நிலையில், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொடுப்பதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயாராக உள்ள நிலையில், அவசர மின்வலுத் தேவையின் நிமித்தம் அதிக

வழக்கு தாக்கல் செய்ய தயாராகிறார் – ஊவா முதலமைச்சர்

Posted by - January 16, 2017

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின்போது ஊவா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஷாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். பிரித்தானியர் ஆட்சி காலத்தில் ஊவா மாகாணத்தில் பல இயற்றை சீரழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடைச் செய்யப்பட்ட மருந்து சந்தையில்

Posted by - January 16, 2017

சிறுநீரக நோய் பாதிப்பினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து வேறொரு பெயரில் சந்தையில் விற்பணைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சன்ன ஜெயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்த கிருமி நாசினி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கிருமிநாசினி பாவனை மற்றும் இன்னும் பல காரணங்களால் நாளாந்தம் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரையில் மரணிப்பதாகவும் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முயற்சி – நசீர் அஹமட்

Posted by - January 16, 2017

சிலர் வெளிநாடுகளின் சக்தியை பயன்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார் அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பேரினவாத மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்க முற்பட்டு தோற்றுப்போன சிலர், போலியான ஆவணங்களை முன்வைத்து கட்சிக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை

அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் மீண்டும் போராட்டத்தில்

Posted by - January 16, 2017

அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் இன்று முதல் மீண்டும் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர். கொழுப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இந்த அறிவித்தலை அதிஸ்ட இலாபச்சிட்டு விற்பனையாளர்கள் சங்கம் விடுத்தது. அதிஸ்ட இலாபச்சிட்டின் விலையை 20 ரூபா வரை குறைக்குமாறு கோரியே இந்த பணிநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிஸ்ட இலாபச்சிட்டுக்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட சில கேரிக்கைகளை முன்வைத்து இந்த மாதம் முதலாம் திகதி முதல் அதிஸ்ட இலாபச்சீட்டு விற்பனையாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதியுடன்

சுவிட்ஸ்சர்லாந்து பயணமானார் பிரதமர்

Posted by - January 16, 2017

சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கு, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலக பொருளாதார மாநாட்டில் 40இற்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர். இதன்போது பிரதமர், முன்னணி அரச தலைவர்கள் மற்றும் முன்னணி சர்வதேச வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என பிரதமர்

அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை-; நாமல் ராஜபக்ஸ

Posted by - January 15, 2017

அரசியல் பழிவாங்கல்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, அரசியல் பழிவாங்கல்கள் பௌத்த பிக்குகளையும் விட்டுவைக்கவில்லை என்று கூறினார். விமல் வீரவங்சவுக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சமனாக பிரதியமைச்சரும் குற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பிரதியமைச்சர் சட்டத்தில் சிக்காமல் இருப்பதும், விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டதும் அரசியல் பழிவாங்கலாகவே கருத

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மக்கள் கோரிக்கை (காணொளி)

Posted by - January 15, 2017

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான், ஓட்டுத்தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, இதுவரை மீள அமைக்கப்படாமல் காணப்படுவதுடன், இதனை மீள ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலை இதுவரை மீள ஆரம்பிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறித்த ஓட்டுத்தொழிற்சாலையினை மீள ஆரம்பிக்கும் போது ஒட்டுசுட்டான் பகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட