தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை ஒன்பது மணியளவில் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மோசடி குற்றச்சாட்டுகள் மூலம் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

