தடைச் செய்யப்பட்ட மருந்து சந்தையில்

225 0

india_drugs_fdiசிறுநீரக நோய் பாதிப்பினால் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து வேறொரு பெயரில் சந்தையில் விற்பணைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சன்ன ஜெயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்த கிருமி நாசினி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கிருமிநாசினி பாவனை மற்றும் இன்னும் பல காரணங்களால் நாளாந்தம் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரையில் மரணிப்பதாகவும் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.