மின்சார கொள்வனவு நடவடிக்கையின் மூலம் அரசாங்காம் மாபியா ஒன்றை உருவாக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மின்னுற்பத்தி முதலீட்டு சங்கத்தினரால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வரட்சி காரணமாக மின்னுற்பத்தி வீழ்ச்சியடையும் என மின்சார சபை அறிவித்தது.
இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பிரதி மின் வலுத்துறை அமைச்சர் அஜித் பீ பெரேரா தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நிலையில், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொடுப்பதற்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயாராக உள்ள நிலையில், அவசர மின்வலுத் தேவையின் நிமித்தம் அதிக விலையில் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாக மின்னுற்பத்தி முதலீட்டாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

