சிலர் வெளிநாடுகளின் சக்தியை பயன்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இல்லாதொழிக்க முயற்சிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குற்றம் சுமத்தியுள்ளார்
அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பேரினவாத மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்க முற்பட்டு தோற்றுப்போன சிலர், போலியான ஆவணங்களை முன்வைத்து கட்சிக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளே இருக்கும் சிலர் இவ்வாறான நயவஞ்சகத்தனமான செயற்பாடுகளை முன்னெடுப்பது ஏமாற்றப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குரோத நோக்கில் வீண்பழி சுமத்துபவர்களின் பொய்யை நம்பி ஏமாறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்தவர்கள் ஒரு போதும் தயாரில்லை என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறுபான்மை சமூகங்கள் ஒற்றுமைப்படுவதன் மூலம் மாத்திரமே இரு சமூகங்களுக்கும் நிரந்தரமான அரசியல் தீர்வு கிட்டும் என்பதில் நம்பிக்கை கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

