தலைவர் சிறையில் இருந்தாலும் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறும்

Posted by - January 22, 2017

கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் தமது கட்சியின் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்குகொண்ட முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இதனை தெரிவித்தார். எவ்வாறாயினும் தமது கட்சியின் கூட்டத்தை சீர்குலைக்க எதிர்பார்த்துள்ள அரசாங்கத்தின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவுடன் மாகாண முதலமைச்சர்கள் சந்திப்பு

Posted by - January 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் ஒன்றுமையின் பொருட்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடலில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சம்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் பங்குகொள்ள உள்ளமையை உறுதி செய்துள்ளனர்.

இலங்கையுடன் வர்த்தகம் – பெல்ஜியம், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் உறுதி

Posted by - January 22, 2017

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெறுவது தொடர்பில் இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என பெல்ஜிய அரசாங்கமும், ஐரோப்பிய வர்த்தக நிறுவனமும் உறுதியளித்துள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வர்வதேச வர்த்தகதுறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பெல்ஜிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போதே இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர்

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

Posted by - January 21, 2017

தெற்கு அதிவேக வீதியின் 66 வது கிலோமீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் திடீரென தரையிறக்கம்

Posted by - January 21, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு உலங்கு வானூர்தியில் ஜனாதிபதி பயணம் செய்த போது, நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வானூர்தி திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது. அங்கிருந்து ஜனாதிபதி தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி அங்கு கொட்டகலை மக்களையும்,

இராணுவம் போர்க்குற்றம் செய்யவில்லை-சிங்கள சட்டத்தரணிகள்

Posted by - January 21, 2017

எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் போர் குற்றங்களை எதிர்நோக்கியுள்ள இலங்கை படையினர் குற்றவாளிகள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக, ரியர் அத்மிரல் சரத் வீரசேகர உட்பட சிரேஷ்ட சிங்கள சட்டத்தரணிகள் சிலர் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் பேரவைக் கூட்டத்தில் இப்படியான சம்பவம் முதல் முறையாக நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு மறைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போர் குற்றங்கள் அடங்கிய 340க்கும்

சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை-உதய கம்மன்பில

Posted by - January 21, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளார். கரைந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ரக தேயிலை அறிமுகம்

Posted by - January 21, 2017

தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்றது. இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 வது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு

முதலமைச்சர்கள் மஹிந்தவை சந்திப்பதற்கு அனுமதி!

Posted by - January 21, 2017

மாகாண முதலமைச்சர்கள், குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.