போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஐந்து பேர் நெல்லியடி, வல்வட்டித்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றும், அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வல்வட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 27 வயதுக்கு இடைப்பட்ட ஐந்து பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

