கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் தமது கட்சியின் கூட்டம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்குகொண்ட முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முசம்மில் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தமது கட்சியின் கூட்டத்தை சீர்குலைக்க எதிர்பார்த்துள்ள அரசாங்கத்தின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

