மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் திடீரென தரையிறக்கம்

315 0

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த உலங்கு வானூர்தி கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இன்று திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது.

கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு உலங்கு வானூர்தியில் ஜனாதிபதி பயணம் செய்த போது, நுவரெலியா மாவட்டத்தில் காலநிலை சீர்கேட்டினால் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வானூர்தி திடீரென தரையிறக்கம் செய்யப்பட்டது.

அங்கிருந்து ஜனாதிபதி தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்திற்கு வாகனத்தில் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கொட்டகலையில் தரையிறங்கிய ஜனாதிபதி அங்கு கொட்டகலை மக்களையும், சிறார்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.