தெற்கு அதிவேக வீதியின் 66 வது கிலோமீட்டர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர்.
கடவத்தையிலிருந்து கொடகம நோக்கி சென்ற வேன் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த வேன் வீதியின் ஓரமாக நிறுத்தியிருந்த போது, அதே திசையில் பயணித்த கெண்டனர் ஒன்று வேனின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், கயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையிலும், ஏனைய 06 பேரும் எல்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் கெண்டனர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

