ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கும் வரையில் எந்த தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் இணைந்து போட்டியிட போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை கூறியுள்ளார்.
கரைந்து கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கியை பாதுகாக்க அவர்கள் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எவரும் போட்டியிட முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

