இலங்கையுடன் வர்த்தகம் – பெல்ஜியம், ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் உறுதி

332 0

GSP_-to-SLஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெறுவது தொடர்பில் இலங்கையில் தற்போது காணப்படும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதிய வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என பெல்ஜிய அரசாங்கமும், ஐரோப்பிய வர்த்தக நிறுவனமும் உறுதியளித்துள்ளன.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் வர்வதேச வர்த்தகதுறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பெல்ஜிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போதே இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்றதன் பின்னர் இலங்கை அமைச்சர்கள் பிரேசில் நகருக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் பிரதி தலைவர் ஆகியோர் 50 மில்லியன் யூரோ பொறுமதியான உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளனர்.