முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சியின் ஒன்றுமையின் பொருட்டு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, சம்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோர் பங்குகொள்ள உள்ளமையை உறுதி செய்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த 7 மாகாணங்களில் முதலமைச்சர்கள் பங்குகொள்வார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

