இலங்கை அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பை மீறியதாக சுவிஸ் மீது ஐரோப்பிய நீதிமன்றம் குற்றச்சாட்டு!

Posted by - January 27, 2017

விடுதலை புலி உறுப்பினர் குடும்பம் ஒன்றை இலங்கைக்கு திருப்பி அனுப்பியதன் ஊடாக, அகதிகளை பாதுகாக்கும் பொறுப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீறியுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. 2013 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது!

Posted by - January 27, 2017

கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த குருகேவை கைது செய்ய உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.

ஐ.தே.க அமைச்சர்களை பின்தொடரும் புலனாய்வு பிரிவினர்! மஹிந்த

Posted by - January 27, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களை புலனாய்வுப் பிரிவினர் பின் தொடர்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் களத்தில் குதித்தார் சந்திரசேகரனின் மகள்!

Posted by - January 27, 2017

சட்டத்தரணி அனுஷா தர்ஷினி சந்திரசேகரனின் வரவானது, மலையக மக்கள் முன்னணிக்கு, மேலும் பலத்தைச் சேர்ப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். அவரைக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பதிவிக்குள் உள்வாங்குவதற்காக, கட்சியின் மத்தியக்குழு ஏகமனதாக தனது ஆதரவை வழங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கு அழைப்பு

Posted by - January 27, 2017

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னிணியின் மாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருக் கட்சிகளினதும் மாநாடும் வெள்ளி விழாவும், எதிர்வரும் 25 – 26ஆம் திகதிகளில் நுவரெலயாவில் நடைபெறவுள்ளது. இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளுமாறு கோரியே, ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் மற்றும் முன்னணியின் நிதிச்செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் ஆகியோர் உள்ளடங்கியக் குழு, ஜனாதிபதி

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தனிப்பட்ட ரீதியில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்ற போதும் அவரது கட்சியைச் சேர்ந்த குழுக்கள் பட்டபகலில் வங்கிகளில் கொள்ளையிட்டு,கொலைகளை செய்துள்ளதாகவும் அவர் இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை தவறு செய்யும் அரசியல்வாதிகள் சிறைக்கு செல்வதும்,அடுத்த நாளே வெளியே வருவதும் வாடிக்கையான செயலாகிவிட்டதாகவும் எனவே அரசியல்வாதிகள் தண்டனையில் இருந்து

யாழ். மருத்துவ பீட மாணவர்களின் நடைபயணம்

Posted by - January 27, 2017

இலவச கல்வி மற்றும் சுகாதார சேவையின் தரத்தை பாதுகாக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த நடைபயணம் இன்று காலை 8 மணிமுதல் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது.

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017

இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். நாடு இன்று சிறந்த பாதையில் செல்கின்றது. நாட்டின் காணப்படும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தகுந்த நேரம் வந்துள்ளது. சிறுபான்மையினருக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் பெரும்பான்மை மக்களும் விருப்புடன் இருக்கின்றனர் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த நான்கு நாட்களாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் இன்று மாலை சந்தித்தார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இந்த மக்கள் இன்று தமது போராட்டத்தை தற்காலிமாக விலக்கிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில்,