அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு ஜனவரி மாதம் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி சத்தியப்பிரமாணம் எடுப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்ட உறுதி மொழியில், ஒரே இனம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் இது குறித்து  பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் தொடர்பாக தெளிவக ஆராய்ந்த பின்னர் வடக்கு மாகாணசபையின் அடுத்த அமர்வில் இதற்கான எதிர்ப்பை வடக்கு மாகாணசபை வெளியிடும் என்று அவைத்தலைவர் சபையில் அறிவித்தார்.

2026ஆம் ஆண்டளவில் இலங்கையின் கடன் 3 ட்ரில்லியன்

Posted by - January 31, 2017

2026ஆம் ஆண்டளவில் 3 ட்ரில்லியன் கடன் தொகையை அரசாங்கம், மீள செலுத்த வேண்டியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில், இது 2026ஆம் ஆண்டு ஆகும் போது நாட்டில் கடன் 3 ட்ரில்லியன் ஆக இருக்கும். அந்த கடனை செலுத்துவதற்கு நாட்டின் வருமானத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். அதற்கு

தங்க கடத்தில் – சகோதரர்கள் கைது

Posted by - January 31, 2017

நாக்கின் கீழ் தங்க பிஸ்கட்டுக்களை மறைத்து வைத்து இந்தியாவுக்கு கொண்டு செல்ல முற்பட்ட சகோதர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து, சுங்க அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர். இதன்போது இவர்களிடம் இருந்து 4 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டன. இதன் பெறுமதி 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஏறாவூர் – மாவடி வீதிப் பகுதியில் டி 56 ரக துப்பாக்கியை வைத்திருந்த ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். அத்துடன்,

மும்பை தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

Posted by - January 31, 2017

2008ம் ஆண்டு இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர் ஒருவர் பாகிஸ்தானின் லாஹுரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இதனை தடை செய்யப்பட்ட லஸ்கர் ஈ தாய்மா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீட் என்பாரே திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் கைதாகியுள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். ஆனால் இந்த

மோசடி குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - January 31, 2017

பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்று அறிக்கைகள் ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டன. இலங்கை உணவு விநியோக நிறுவனம், ஸ்ரீலங்கன விமானசேவை நிறுவனம் மற்றும் லுனுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஆகியன தொடர்பான அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. பாரிய நிதி மேசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் முதலானவை குறித்து இந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – நாட்டின் துரிதவளர்ச்சிக்கு பங்களிக்கும் – பிரதமர்

Posted by - January 31, 2017

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீள கிடைக்கப்பெற்றமையானது, நாட்டின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் ஊடாக 500 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பிய சந்தைக்குள் இலங்கையால் பிரவேசிக்க முடியும். இது அதிகப்படியான அந்நிய செலாவணியை நாட்டுக்கு ஈட்டிக் கொடுக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் உலகில் அதிக சனத்தொகையைக் கொண்ட நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் சந்தை வாய்ப்பினை

அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிக்கின்றது – மஹிந்த குற்றச்சாட்டு

Posted by - January 31, 2017

தற்போதைய அரசாங்கம் எதேச்சதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி மோசடியானது நாட்டுக்கு அகௌரவமாகும். அதன் உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆனால், அரசாங்கம் அதைக் கைவிடப் பார்க்கின்றது. வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் முதலில் நிறைவேற்ற வேண்டும். இந்த விடயங்களின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரம் குறித்து கோரிக்கை

Posted by - January 31, 2017

கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கணக்காய்வாளர் என்பவர் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே பொறுப்புக்கூற வேண்டியவராவார். அமைச்சர்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய தேவை அவருக்கு இல்லை. எனவே, கணக்காய்வாளர் நாயகத்தின் அதிகாரத்தை மேலும் அதிகரிக்க தாம் ஆதரவு வழங்குவதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா தெரிவித்துள்ளார்.

விடுதலையை விலை பேசும் “சுமந்திரம்”

Posted by - January 31, 2017

தமிழர்களுடைய விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது மௌனிக்கப்பட்ட பின்னரும் உயரிய கட்டுக்கோப்பை பேணும் வகையிலேயே கடந்த ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.

கடும் எச்சரிக்கையுடனான பிணை !

Posted by - January 31, 2017

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 இளைஞர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.