வில்லிங்கன் சுவெனிங்கன் தேசியச் செயற்பாட்டாளர் மகாதேவா சிவநேசன் அவர்கள் சாவடைந்துள்ளார்.

331 0

அமரர்.மகாதேவா சிவநேசன்
பிறப்பிடம்: வல்வெட்டி-யாழ்ப்பாணம் தமிழீழம்
வதிவிடம்: வில்லிங்கன்-சுவெனிங்கன்இ யேர்மனி (Villingen-Schwenningen, Germany)

இயற்கையின் படைப்பில் மாந்த இனம் பகுத்தறியும் ஆற்றலை தன்னகத்தே கொண்டுள்ளது. அகம், புறத்தில் ஏற்படும் வினையாற்றலின் விளைவாக அனுபவ அறிவு ஏற்படுகின்றது. அந்த அறிவே மாந்த இனத்தை மற்றய உயிரினங்களில் இருந்து உயர்வாகக் காட்டுகின்றது. அத்தகைய தன்மை உள்ள மனிதன் இவ்வுலகில் வாழும் போது, தன் வாழ்வை அறிவு பூர்வமாகவும், மேன்மையாகவும் வகுத்து வாழ்வதே,வாழ்வின் உச்சமாக கருதப்படுகின்றது.

அதிலும் தன்னினத்தின் உயர்வுக்காகவும் , விடுதலைக்காகவும் வாழ்வது , பிறப்பின் ழுமையை உணர்வதற்கு ஒப்பாகும். அந்தவகையில் அமரர்.மகாதேவா சிவநேசன் அவர்கள் தேசவிடுதலைப்பற்றோடும், உணர்வோடும் தமிழீழ விடுதலைக்காகச் செயலாற்றிய செயற்பாட்டாளராவார்.இறுதிவரை தன் விடுதலைப் பங்களிப்பை ஆற்றிய உணர்வாளனை இழந்து நிற்கின்றோம். வில்லிங்கன்-சுவெனிங்கன் நகரத்திற்கு வந்த நாளிலிருந்து தேசப்பற்றும், மனிதநேயமும், அன்பும் கொண்டு அந் நகரத்து மக்களையும் அயல் நகரமக்களையும் தேசவிடுதலை உணர்வோடு ஒருங்கிணைத்து பணியாற்றியவர்.

இங்கு உள்ள பிள்ளைகளுக்காக தமிழாலயம் அமைத்து அவர்களுக்குத் தமிழையும்,கலை, கலாச்சாரப் பண்புகளைப் புகட்டுவதற்கு அரனாக இருந்தவர். அனைவருடனும் பண்புடன் வாழ்ந்;து இயற்கை எய்திய அமரர்.மகாதேவா சிவநேசன் அவர்களை இழந்து வாடும் மனைவி, உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு, அன்னாரின் உயிர்ப்பு இயற்கையோடு ஒன்றிக் கலந்து அமைதியடைய வேண்டுகின்றோம்.

இனத்தின் வேர்பிடித்து ஆழ்ந்த உயிர்கள்
இனத்தின் பதிவில் சேர்வர்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இறுதிவணக்க நிகழ்வு நடைபெறும் முகவரி.

இடம்: Bestattungs-Dienst Laufer GmbH,
Am Waldfriedhof 7-9
78056 VS-Schwenningen
காலம்: 11.01.2026, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:00 மணி