பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் மூன்று அறிக்கைகள் ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்டன.
இலங்கை உணவு விநியோக நிறுவனம், ஸ்ரீலங்கன விமானசேவை நிறுவனம் மற்றும் லுனுவில தெங்கு ஆராய்ச்சி நிலையம் ஆகியன தொடர்பான அறிக்கையே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
பாரிய நிதி மேசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் முதலானவை குறித்து இந்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

