மும்பை தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

354 0

2008ம் ஆண்டு இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேக நபர் ஒருவர் பாகிஸ்தானின் லாஹுரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் 166 பேர் பலியாகினர்.

இதனை தடை செய்யப்பட்ட லஸ்கர் ஈ தாய்மா அமைப்பின் தலைவரான ஹபீஸ் சயீட் என்பாரே திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் தற்போது அவர் கைதாகியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்.

ஆனால் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அவரே என்று, அமெரிக்காவும் இந்தியாவும் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றன.